இன்சூரன்ஸ்/
Insurance

இன்சூரன்ஸ்:

நமது நிறுவனம் iffco Tokio General Insurance நிறுவனத்துடன் இணைந்து மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்குகிறது. நமது நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் இன்சூரன்ஸ் செய்து தரப்படும். ஆனைத்தும் தங்கள் இல்லம் தேடி வந்து செய்து தரப்படும். இந்த நிறுவனம் நமது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மாடுகளுக்கு 1) 25,000/- 2) 50,000/- and 3) 70,000/- வரை இன்சூரன்ஸ் காப்பீடு வழங்குகிறது. தங்கள் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் கோரும் வாடிக்கையாளர் இல்லத்திற்கு மேற்படி நிறுவன ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர்கள் கொண்ட குழு நேரில் வந்து மாடுகளை ஆய்வு செய்து இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள். இன்சூரன்ஸ் கோரும் வாடிக்கையாளர்கள் தங்கள் மாடுகளுக்கு மேற்கண்ட தொகையில் ஓன்றை தேர்வு செய்யும் பட்சத்தில் மேற்படி தொகையில் 6% ஆண்டிற்கு செலுத்த வேண்டும். மேற்படி தொகையை எவ்வாறு செலுத்த வேண்டும்

உதாரணமாக: ஓரு மாடுக்கு ரூ.50,000 இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என கோரினால் ஒரு ஆண்டுக்கு ரூ.3500 (6%+500 GST) செலுத்த வேண்டும்.

கீழ்கண்ட காரணங்களுக்காக இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகை வழங்கப்படும்

1. இயற்கை நிகழ்வுகள் ( மழை, நில அதிர்வு பஞ்சம்)

2. கணிக்க முடியாத சூழ்நிலை

3.நோய்

4. ஆப்ரேசன்

5. பயங்கரவாத செயல்

6. வேலை நிறுத்தம், கலவரம் போன்ற செயல்கள்மேற்கண்ட செயல்களால் பாதிப்படைந்த மாடுகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்

நமது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்கள் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமெனில் எங்கள் நிறுவனத்தினை அனுகி பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோமாதா அக்ரி பார்ம்

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள் .

Contact Us